Powered by Blogger.

Tuesday, February 1, 2011

வேட்பாளா்கள் பற்றிய விபரம்


இறக்காமம் பிரதேச சபை- போட்டியிடும் வேட்பாளா்கள் பற்றிய விபரம்
இறக்காமம் நிருபர் அம்பாறை மாவட்டத்தில் இம்முறை புதிதாக உருவாக்கப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபை,அக்கரைப்பற்று மேற்கு பிரதேச சபை,இறக்காமம் பிரதேச சபை ஆகியவற்றுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட இறக்காமம்,வரிப்பத்தான்சேனை,மாணிக்கமடு,குடுவில்,நல்லதண்ணிமலை,மஜீத்புரம்,அமீர் அலிபுரம்,வாங்காமம் 10 ,11,இலுக்குச் சேனை மேற்கு,இலுக்குச் சேனை கிழக்கு,மலையடிகிராமம்,நியுகுண,8 ஆம் கட்டை உள்ளிட்ட 12 கிராம சேவகர் பிரிவுகளிலும் 8185 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். சுமார் 18 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட இறக்காமம் பிரதேச சபைக்கு 7 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதற்காக அரசியற் கட்சி சுயேச்சைக் குழுக்கள் ஆகியவற்றின் சார்பாக 72 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
இதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் விபரம் வருமாறு;
பொதுசன ஐக்கிய முன்னணி;
1.       எஸ்.எல்.எம்.ஜமால்தீன்,
2.       ஜே.தாஹிர்,
3.       ஏ. அமீர்,
4.       ஜே.றஹீம்,
5.       எச்.எம்.சமறநாயக்க,
6.       எஸ்.எல்.பா×க்
7.       ,ஏ.எல்.றியால்,
8.       என்.எம்.ஆசிக்,
9.       ஆர்.எம்.பாயிஸ்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
1.       யூ.கே.ஜெபீர்,
2.       ஏ.அயாத்துவாவா,
3.       யூ.எல்.ஜிப்ரி,
4.       எம்.எஸ்.ஜெமீல் காரியப்பர்,
5.       எம்.ஐ.சுபைர்,
6.       எம்.ஐ.நைஷார்
7.       ஏ.எப்.பர்ஹான்,
8.       எம்.எல்.முஸ்மி,
9.       எஸ்.இஷ்ஹாக்.
 ஐக்கிய தேசியக்கட்சி;
1.       எம்.வீ.குமார சிங்க,
2.       யூ.எல்.றாஸிக்,
3.       ஏ.நிர்மலா,
4.       எச்.எல்.இஸ்மா லெவ்வை,
5.       ஏ.பீ.கபூர், எம்.ஜே.பீ.மல்லவிராச்சி,
6.       ஏ.என்.எம். கிஸ்மி,
7.       எஸ்.எம்.இர்பான்,
8.       எம்.யூ.இஸ்திகார்.
ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.);
1.       ஏ.ஆர்.அசாதீக்,
2.       ஏ.எல்.மௌஜுன்,
3.       பீ.எம்.சித்தீக்,
4.       எம்.சஹீத்,
5.       ஏ.எம்.சாலிதீன்,
6.       யூ.எல்.சப்றாஸ்,
7.       எம்.வை.எம்.றீப்னாஸ்,
8.       ஏ.எல்.அல்தாயிஸ்,
9.       எஸ்.அஷ்வர்.
இதேவேளை இறக்காமம் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்த 9 சுயேச்சைக் குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக அம்பாறை உதவித்தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். இப்புதிய பிரதேச சபையைக் கைப்பற்றும் நோக்கில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட தினமான கடந்த வியாழக்கிழமையிலிருந்து வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று மக்கள் ஆதரவைத் தேடி வருகின்றனர். சுமார் 22 வருடங்களுக்குப் பின் இறக்காமம் பிரதேச மக்கள் சம்மாந்துறைப் பிரதேச சபையிலிருந்து பிரிந்து தங்களைத் தாங்களே ஆளுகின்ற முதலாவது பிரதேசசபைத் தேர்தலை சந்திக்கவிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

No comments:

Post a Comment

இத்தளம் பற்றி

இயற்கை அழகும் செயற்கை எழிலும் கொஞ்சி விளையாடும் சிறிய கிராமமே இறக்காமம். உங்கள் அனைவரையும் இறக்காமம் அன்புடன் வரவேற்கின்றது.

இறக்காமம் பற்றி

பிரபலமான இடுகைகள்

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP